​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யூடியூபர் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Published : Feb 10, 2022 5:41 PM

யூடியூபர் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Feb 10, 2022 5:41 PM

திமுக மீது அவதூறு பரப்பியதாக, யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வீடுகள் முன்பு திமுக சார்பில் கோலம் போடும் போராட்டம் நடந்தது. அதனை விமர்சித்து மாரிதாஸ் யூடியூபில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.