புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து குழு அமைத்து விசாரிக்க கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் அரியாங்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு மாணவி வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாணவி ஹிஜாப் அணிய தலைமை ஆசிரியர் கோமதி மறுப்பு தெரிவித்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கு, மாணவர்களிடையே பிரிவினை வரக்கூடாது என்பதற்காக, தாம் அவ்வாறு கூறியதாக, மாணவியின் உறவினர்களிடம் தலைமை ஆசிரியை தரப்பில் விளக்கமளித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இது பற்றி துணைநிலை ஆளுநரிடம் விளக்கமளித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், இணை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்க பரிந்துரைத்தார்.