​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விழிப்புடன் இல்லாவிட்டால் உத்தரப் பிரதேசம் கேரளமாகி விடும் என கூறிய யோகி ஆதித்யநாத்துக்குப் பினராயி விஜயன் பதில்

Published : Feb 10, 2022 5:13 PM

விழிப்புடன் இல்லாவிட்டால் உத்தரப் பிரதேசம் கேரளமாகி விடும் என கூறிய யோகி ஆதித்யநாத்துக்குப் பினராயி விஜயன் பதில்

Feb 10, 2022 5:13 PM

மக்கள் விழிப்புடன் வாக்களிக்காவிட்டால் உத்தரப் பிரதேசம் கேரளமாகி விடும் என யோகி ஆதித்யநாத் கூறியதற்குக் கேரள முதலமைச்சர் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவையொட்டி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள வீடியோவில், விழிப்புடன் இல்லாவிட்டால் ஐந்தாண்டுகளில் பாடுபட்டது வீணாகிவிடும் என்றும் காஷ்மீர், கேரளம், வங்கம்போல் உத்தரப்பிரதேசம் ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், யோகி ஆதித்யநாத் அஞ்சுவதுபோல் உத்தரப்பிரதேசம் கேரளமாக மாறினால் சிறந்த கல்வி, மருத்துவ சேவைகள், சமூகநலத் திட்டங்கள், வாழ்க்கைத் தர மேம்பாடு, நல்லிணக்கமுள்ள சமுதாயம் ஆகியவற்றுடன் விளங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.