​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக கோவில்களில் பிரதமரின் உரை ஒளிபரப்பிய விவகாரத்தில் விதிமீறல் இல்லை - உயர்நீதிமன்றம்

Published : Feb 10, 2022 2:55 PM

தமிழக கோவில்களில் பிரதமரின் உரை ஒளிபரப்பிய விவகாரத்தில் விதிமீறல் இல்லை - உயர்நீதிமன்றம்

Feb 10, 2022 2:55 PM

ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என தெரிவித்த உயர்நீதிமன்றம், அது குறித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேதர்நாத் கோவிலில் நடைபெற்ற ஆதிசங்கரர் பூஜையை தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

அதன் விசாரணையில், மத்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், அது அரசியல் அல்ல, ஆன்மீக நிகழ்ச்சி தான் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஆதி சங்கரர் பற்றிதான் பிரதமர் பேசியுள்ளார் என குறிப்பிட்ட நீதிபதி, அவரது பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டதாக கருத்து தெரிவித்தார்.