திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கோவில் அருகேயுள்ள புஷ்பகிரி மடத்தில் இன்று நடைபெற்ற தன்னுடைய பேத்தியின் திருமணத்தில் கலந்து கொண்ட பின், கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார்.
முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு வரவேற்பு முறையை தவிர்த்து வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்த வெங்கையா நாயுடுவுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வேத பண்டிதர்கள் வெங்கையா நாயுடு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு வேத ஆசி வழங்கினர்.