நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைக் கண்காணிக்கத் தமிழக அரசு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் குழுக்களை அமைத்துள்ளது.
தலைமைச் செயலர் தலைமையிலான மாநில அளவிலான குழுவில் அரசின் பல்துறைச் செயலர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினராக இடம்பெறுவர் என்றும், இதன் ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.
மாவட்டக் குழுவுக்கு ஆட்சியர் தலைவராகவும், காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர்கள் உறுப்பினராகவும் செயல்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளது. கோட்ட அளவிலான குழுவுக்குக் கோட்டாட்சியர் தலைவராகவும், வட்டாட்சியர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளது.