நீலகிரி மாவட்டத்தில் தனது எஜமானரைத் தாக்கிய கரடியை வளர்ப்பு நாய் ஒன்று விரட்டியடித்து அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. கோத்தகிரி குஞ்சப்பனை என்ற இடத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் வசித்து வருகிறார்.
வீட்டுக் காவலுக்காக பப்பி என்ற பெயர் கொண்ட நாய் ஒன்றையும் சந்திரன் வளர்த்து வருகிறார். நேற்று அவர் தோட்டத்தில் இருந்த போது குட்டியுடன் வந்த கரடி சந்திரனைத் தாக்கியுள்ளது.
அவரின் அலறல் சப்தம் கேட்ட நாய் பப்பி விரைந்து வந்து கரடியையும் அதன் குட்டியையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தது. நாயின் சாதுர்யத்தால் கையில் காயங்களுடன் சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.