புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் க்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து பணம் திருடும் பீகார் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார், 50 சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முடிவில் திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த பீகாரைச் சேர்ந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களது வங்கி ஏடிஎம் கார்டு, ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டாம் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார்.