ரேஷன் கடைகள் மூலமாக சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரேஷன் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த திட்டத்தை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்கள் வரவேற்றுள்ளனர். இந்தத் திட்டத்துக்கு விருப்பமுள்ள மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.