நெதர்லாந்தில் ரோபாட் டேக்ஸி போன்று ரோபோட் படகு உருவாக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள படகிற்கு Roboat என கண்டுபிடிப்பாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம் நகர கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், விரைவில் பொது சேவைக்கு கொண்டு வரப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தபால் சேவை, வணிக போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பன்முகத் தன்மையில் படகை இயக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.