ஹைதரபாதில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளர். பெட்ரோல், டீசல் விலை உயர்வே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பயிர்கள் சேதம் அடைந்து, வரத்துக் குறைந்திருப்பதாகவும் காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.