ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினங்கள் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் ஏர் இந்தியா மீதான பங்குகளை விலக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான கடன் வசதியை நீட்டிப்பதை நிறுத்தியுள்ளதாகவும் எனவே ஏர் இந்தியாவின் நிலுவைத் தொகையை உடனடியாகக் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.