சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக் ஆகிய 4 பேர் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய கூடுதல் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் நாளை பதவியேற்க உள்ளார். இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.