​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டு வாசலுக்கே வரும் கொரோனா தடுப்பூசி - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

Published : Oct 28, 2021 6:16 AM



வீட்டு வாசலுக்கே வரும் கொரோனா தடுப்பூசி - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

Oct 28, 2021 6:16 AM

நவம்பர் மாதத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துமாறு மாநில அரசுகளிடம் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் இலவசத் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக 100 கோடி டோஸ்களை கடந்துவிட்ட போதும் 20 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தத் தக்ககவர்கள் என்று தேடிக் கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்துவது குறித்து மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

வீடுதோறும் தடுப்பூசி என்ற மெகா திட்டத்தை அடுத்த மாதம் செயல்படுத்த இருப்பதாக இக்கூட்டத்திற்குப் பிறகு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.எந்த மாவட்டமும் விடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.