வெலிங்டன் இராணுவ நிலையத்தில் 75வது ஆண்டு காலாட்படை நினைவு தினம்
Published : Oct 27, 2021 10:08 PM
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ நிலையத்தில் 75வது ஆண்டு காலாட்படை நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
1947ஆம் ஆண்டில் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் விரட்டியடித்தனர். இதன் 75ஆவது ஆண்டு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு குன்னூர் வெலிங்டன் ராணுவக் கல்லூரி அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் காலாட் படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் MJS காலன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவமனை ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர் கெளரவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.