MeToo விவகாரம் - இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலையை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
Published : Oct 27, 2021 8:31 PM
MeToo விவகாரம் - இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலையை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
Oct 27, 2021 8:31 PM
இயக்குனர் சுசி கணேசனையும் "மீ டூ" இயக்கத்தின் கீழ் அவர் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலையையும் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லீனா மணிமேகலை மீது தாம் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சுட்டிக்காட்டி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என மண்டல பாஸ்போர்ட் அலுவலரிடம் சுசிகணேசன் புகார் அளித்திருப்பதால், பாஸ்போர்ட் கிடைப்பதில் லீனா மணிமேகலைக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஆராய்ச்சிப் படிப்புக்காக கனடா செல்ல வேண்டும் என்பதால் தனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரி லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் நவம்பர் 1 ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு லீனா மணிமேகலையையும், சுசி கணேசனையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.