விளைபொருட்களை விமானங்களில் கொண்டுசென்று சந்தைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Published : Oct 27, 2021 7:56 PM
விளைபொருட்களை விமானங்களில் கொண்டுசென்று சந்தைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Oct 27, 2021 7:56 PM
வேளாண் பொருட்களை விமானங்களில் கொண்டு சென்று விரைவாகச் சந்தைப்படுத்தப் பல்வேறு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், காய்கறிகள், பழங்களைக் குறித்த நேரத்தில் சந்தைகளுக்குக் கொண்டுசெல்லவும், அதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் எட்டு அமைச்சகங்கள் ஒன்றாக இணைந்து கிரிசி உடான் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தாவில் இருந்து தூரக் கிழக்கு நாடுகளுக்கு மீன்கள், இறால்கள் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.