தனியார் மருத்துவமனையில், குத்துவிளக்கை லாவகமாக திருடிச்சென்ற கொள்ளையன்..!
Published : Oct 27, 2021 7:48 PM
தனியார் மருத்துவமனையில், குத்துவிளக்கை லாவகமாக திருடிச்சென்ற கொள்ளையன்..!
Oct 27, 2021 7:48 PM
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு அருகே முறையாக செயல்படாமல் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இருந்த குத்துவிளக்கை,கொள்ளையன் ஒருவன் லாவகமாக திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவமனை கடந்த சில நாட்களாக மூடபட்டுள்ளது. இதனை நோட்டமிட்டு அறிந்த கொள்ளையன், கடந்த 22ஆம் தேதி நள்ளிரவில் உள்ளே நுழைந்து வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை திருடிச் சென்றுள்ளான்.
இதுகுறித்து, மருத்துவமனை மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.