இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
Published : Oct 27, 2021 7:26 PM
மாணவர்கள் இடையேயான கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய, வீடுகளுக்கேச் சென்று கல்வி கற்று கொடுக்கும் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம், தன்னார்வலர்களை கொண்டு, 6 மாதத்திற்கு தினமும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லம் தேடி கல்வி திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டமாக மாறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.