வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது பற்றி செயல்திட்டம் வகுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
Published : Oct 27, 2021 7:11 PM
வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது பற்றி செயல்திட்டம் வகுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
Oct 27, 2021 7:11 PM
வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை வகுக்க அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது எனக் கருத்து தெரிவித்துள்ளது.
சேலம் தாத்தையாம்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீடில்லா மக்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, தமிழகம் பல துறைகளில் முன்னணியில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்கள் நல அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.