பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கடந்த நிதியாண்டில் கிடைத்த இலாபத்தில் இருந்து அரசுக்கான பங்குத் தொகையாக ஆறாயிரத்து 665 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு 53 விழுக்காடு பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை ஒட்டுமொத்தமாக விற்க அரசு திட்டமிட்டுள்ளது. அசாமின் நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு விற்றதில் கிடைத்த பங்குத் தொகையும் இதில் அடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.