​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியப் பகுதியாக மாறும் - இந்திய விமானப் படை மேற்கு பிராந்திய கமாண்டர் திட்டவட்டம்

Published : Oct 27, 2021 5:59 PM

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியப் பகுதியாக மாறும் - இந்திய விமானப் படை மேற்கு பிராந்திய கமாண்டர் திட்டவட்டம்

Oct 27, 2021 5:59 PM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியாவின் பகுதியாக மாறும் என இந்திய விமானப் படையின் மேற்கு பிராந்திய கமாண்டரான மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார்.

1947ஆம் அண்டில் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை, இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் விரட்டியடித்தனர். இதன் 75ஆவது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் தேவ், ஐக்கிய நாடுகள் சபை தலையிடாமல் இருந்திருந்தால், முழு காஷ்மீரும் நம்முடையதாகி இருக்கும் என்றார். மேலும், வரும் ஆண்டுகளில் முழு காஷ்மீரும் இந்தியா வசம் இருக்கும் என்றும் அமித் தேவ் தெரிவித்தார்.