கர்நாடகாவில் 23 மற்றும் 43 வயதான இருவருக்கு AY.4.2 உருமாற்ற வைரசின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பெங்களூருவில் உள்ள ஆய்வகம் ஒன்று உறுதி செய்துள்ளது.
இது குறித்து சர்வதேச தொற்று நோயியல் நிபுணர்களிடம் தெரிவித்த போது, இந்த உருமாற்ற வைரஸ் பற்றி மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என கூறியதாக கர்நாடகாவின் கொரோனா வைரஸ் மரபியல் கண்காணிப்புக் குழு உறுப்பினர் Dr.விஷால் ராவ் தெரிவித்தார். பிரிட்டன் மக்களில் 10 சதவிகிதம் பேருக்கு இந்த வைரஸ் தொற்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் அதிகபட்ச சீரோபிரிவெயிலன்ஸ் (seroprevalance) மற்றும் தடுப்பூசி போடப்பட்ட இடங்களில் இந்த உருமாற்ற வைரசால் 3 ஆம் அலை வீச வாய்ப்பில்லை என்றும் இந்த இரண்டும் இல்லாத பகுதிகளில் பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.