அனல் ஆற்றலை சேகரித்து வைக்க உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் பொருள்.. ஆஸ்திரேலிய பொறியியலாளர்கள் சாதனை..
Published : Oct 27, 2021 3:25 PM
அனல் ஆற்றலை சேகரித்து வைக்க உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் பொருள்.. ஆஸ்திரேலிய பொறியியலாளர்கள் சாதனை..
Oct 27, 2021 3:25 PM
அனல் ஆற்றலை சேகரித்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் பொருளை ஆஸ்திரேலிய பொறியியலாளர்கள் தயாரித்துள்ளனர்.
அலுமினியம் மற்றும் கிராஃபைட் பயன்படுத்தி நியூ காஸ்ட்ல் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செங்கல் வடிவிலான பொருள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் ஆற்றலை பேட்டரிகளை போல சேமித்து வைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலக நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகளவில் உற்பத்தி செய்து வரும் நிலையில், அதை சேகரித்து, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் முக்கியதுவம் பெற ஆரம்பித்துள்ளன.