தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதன் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கனமழையும், இதர தென் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 29-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.