சென்னை வேளச்சேரியில் மசாஜ் செண்டருக்குள் புகுந்து பட்டாக் கத்தியால் தாக்கிவிட்டு 5 சவரன் நகை, 30ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கிரியேட்டர் சலூன் அண்ட் ஸ்பாவுக்குள் நேற்று மதியம் திடீரென புகுந்த மர்ம கும்பல், பட்டாக்கத்தியுடன் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது. பின்னர், பணம் தர மறுத்த ஸ்பா ஊழியரை தலையில் பட்டாக்கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்த பெண் ஊழியரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துள்ளனர்.
அத்தோடு, ஹேண்ட் பேக்குகள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த 30ஆயிரம் ரூபாய், 7 செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பியோடியது.