சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கூறிய கருத்து சரியானதே என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக மீட்டெடுப்பதே இலக்கு எனவும், எப்போதும் நிதானமாக பேசக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் தற்போதும் சரியான கருத்தையே கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.