​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்த நூற்றாண்டில் பூமியின் சராசரி தட்பவெப்பம் 2.7 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு - ஐ.நா எச்சரிக்கை

Published : Oct 27, 2021 11:34 AM

இந்த நூற்றாண்டில் பூமியின் சராசரி தட்பவெப்பம் 2.7 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு - ஐ.நா எச்சரிக்கை

Oct 27, 2021 11:34 AM

இந்த நூற்றாண்டில் பூமியின் சராசரி தட்பவெப்பம் 2.7 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

2015-ல் ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் சராசரி புவி வெப்ப உயர்வின் அளவை 2 டிகிரி செல்சியஸ்-க்கு மிகாமல் வைத்துக்கொள்ள உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்தன.

கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகளின் படி அந்த  இலக்கை அடைவது கடினம் என ஐ.நா தெரிவித்துள்ளது.

2030-க்குள் புவி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ்-க்குள் வைத்துக்கொள்ள கரியமில வாயு உமிழ்வை 30 சதவீதம் குறைக்க வேண்டும் எனவும், அதையே 1.5  டிகிரி செல்சியஸ்-க்குள் வைத்துக்கொள்ள கரியமில வாயு உமிழ்வை 55 சதவீதம் குறைக்க வேண்டும் எனவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.