வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
Published : Oct 27, 2021 10:57 AM
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
Oct 27, 2021 10:57 AM
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக அது மத்திய தெற்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் எனவும், நாளை மறுநாள் 29-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.