பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு மாற்ற வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு
Published : Oct 27, 2021 9:00 AM
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு மாற்ற வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு
Oct 27, 2021 9:00 AM
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரசின் AY.4.2 மரபணு மாற்ற வைரஸ் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், குறிப்பிட்ட அந்த வைரஸ் எந்த அளவுக்கு பரவும் என்பதை கூற இயலாது எனவும் தெரிவித்தார். இந்த மரபணு மாற்ற வைரஸ் குறித்து கடந்த வாரம் தகவல் வெளியிட்ட பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை, டெல்டா மரபணு மாற்ற வைரசை விட இது வேகமாக பரவக்கூடியது என தெரிவித்துள்ளதாக கூறினார்.