கொரோனா தொற்றைக் கண்டறியும் கருவிகளின் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
Published : Oct 27, 2021 7:47 AM
நாட்டில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருதையடுத்து பெருந்தொற்றைக் கண்டறியும் உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 17 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 216 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் கண்டறிவதில் பயன்படுத்தப்படும் ஆர்டி - பிசிஆர் கருவிகள், சிரிஞ்சுகள், பாண்டேஜ் துணிகள், காற்று வடிகட்டி என அனைத்து கருவிகளுக்கான ஏற்றுமதிக்கான தடையை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நீக்கியுள்ளது.