கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்
Published : Oct 27, 2021 7:36 AM
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்
Oct 27, 2021 7:36 AM
கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.
நோயாளிகள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளின் வகையைப் பொறுத்து, சில ஆயிரம் ரூபாய் முதல்15 லட்சம் ரூபாய் வரை கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிகப்படியான தொகையை வசூலித்ததற்காக மருத்துவமனைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும், வசூலிக்கப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் நீதிபதிகள் அரசை கேட்டுக் கொண்டனர்.