​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலிப் பட்டாவை ரத்து செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார்.. திருச்சியில் தாசில்தார் கைது

Published : Oct 27, 2021 7:16 AM

போலிப் பட்டாவை ரத்து செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார்.. திருச்சியில் தாசில்தார் கைது

Oct 27, 2021 7:16 AM

திருச்சியில் போலி பட்டாவை ரத்து செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகரை சேர்ந்த சீனிவாசன் தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறொருவர் பட்டா மாறுதல் செய்துள்ளதாகவும், அதை ரத்து செய்ய தாசில்தாரை கோரியதாகவும் கூறப்படுகிறது. போலி பட்டாவை ரத்து செய்ய தாசில்தார் கோகுல் 50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாகவும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சீனிவாசன் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்ட தாசில்தார் கோகுலை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.