சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவர் ஆய்வு செய்தார். நெசப்பாக்கத்தில் 47 கோடி ரூபாய் செலவில் 10 எம்.எல்.டி கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் 3-ம் நிலை கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 எம்எல்டி குடிநீர் வழங்கி வருவதாக தெரிவித்தார்.