தடுப்பூசி போடுவதில் இந்தியா 100 கோடி டோஸ் என்ற சாதனையை கடந்துள்ளதற்கு WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் இந்த அசாதாரணமான சாதனை எட்டப்பட்டதற்கு திறமையான பிரதமரே காரணம் என தென் கிழக்கு ஆசியாவுக்கான WHO மண்டல இயக்குநர் Dr.பூனம் கேத்ரபால் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான புரிதல், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முழுமையான அர்ப்பணிப்பு ஆகியனவும் இந்த சாதனைக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
உயிர் காக்கும் தடுப்பூசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற இந்தியாவின் பாராட்டத்தக்க முயற்சியின் பின்னணியில் இந்த 100 கோடி டோஸ் சாதனையை பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.