​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 ஏக்கருக்கு தேவையான நாற்றாங்காலை நவீன முறையில் வீட்டு மாடியில் வளர்க்கும் விவசாயி

Published : Oct 21, 2021 8:17 AM

3 ஏக்கருக்கு தேவையான நாற்றாங்காலை நவீன முறையில் வீட்டு மாடியில் வளர்க்கும் விவசாயி

Oct 21, 2021 8:17 AM

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த பெரம்பூர் கிராமத்தில் வீட்டு மாடியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேறில்லா நாற்றங்கால்களை விவசாயி ஒருவர் வளர்த்து வருகிறார்.

3 ஏக்கருக்கு தேவையான கிச்சிலி சம்பா மற்றும் தூயமல்லி நெல் ரக நாற்றங்கால்களை தன் வீட்டு மாடியிலே விவசாயி பாலமுருகன் வளர்த்துள்ளார்.

குழித்தட்டு ட்ரேயில் கருக்காய், தேங்காய் நார், மரத்தூள்களை பரப்பி அதில் நெல் மணிகளை விதைத்து, பூவாளி மூலம் தண்ணீர் தெளித்து வருகிறார். இந்த முறையால் அதிகப்படியான நீர் சேமிக்கப்படுவதாக விவசாயி தெரிவித்தார்.