உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
இரவு பகலாகத் தொடரும் மீட்பு முயற்சிகளால் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 11 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 17 தேசியப் பேரிடர் மீட்புக்குழுக்கள், ராணுவம், காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவுகளால் முக்கிய சாலைகள் பழுதடைந்துள்ளன. சாலைகளில் பாறைகள் உருண்டு கிடக்கின்றன. பல கிராமங்களில் மின்சாரம் தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே குமான் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் பார்வையிட்டார். மழை வெள்ளச் சேதம் குறித்து அறிக்கை வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.