வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும் இந்தியா வந்தததும் 2 முறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25 முதல் இது அமலுக்கு வருகிறது.
இதற்கான புதிய விதிமுறைகளையும் வழிகாட்டல்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் வேகம் அடைந்திருக்கும் நிலையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
இச்சூழலில் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா உருமாறிய நிலையில் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.