மதிமுகவின் தலைமை கழகச் செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு மதிமுகவில் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது . இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 104 வாக்குகள் துரை வைகோவிற்கு ஆதரவாகவும் , இரு வாக்குகள் எதிராகவும் பதிவாகின.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, " மதிமுகவில் துரை வைகோ இணைந்து பணியாற்ற வேண்டும் என 2 ஆண்டுகளாக கட்சியினர் வற்புறுத்தி வந்தார்கள் என்றும் அவருக்கு பொறுப்பு வழங்க காரணம் வாரிசு அரசியல் அல்ல, மாறாக தொண்டர்களின் விருப்பம் என்றும் கூறினார்.