​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 11 சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ கிடைக்க வாய்ப்பு - வானிலை மையம்

Published : Oct 20, 2021 7:17 PM

வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 11 சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ கிடைக்க வாய்ப்பு - வானிலை மையம்

Oct 20, 2021 7:17 PM

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 11சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வழக்கமாக அக்டோபர் 2ஆவது வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு இம்மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய பகுதிகளில் வரும் 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் இயல்பாக 44 செண்டி மீட்டர் மழை பெய்யும். இந்தாண்டு இயல்பை விட 11% கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.