​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம்.. இறுதிச்சடங்கு நடந்த போது நிகழ்ந்த பரிதாப சம்பவம்..!

Published : Oct 20, 2021 7:15 PM

மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம்.. இறுதிச்சடங்கு நடந்த போது நிகழ்ந்த பரிதாப சம்பவம்..!

Oct 20, 2021 7:15 PM

புதுச்சேரியில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த மகனின் இறுதி சடங்கின் போது, துக்கம் தாளாமல் நெஞ்சு வலி ஏற்பட்டு தந்தையும் உயிரிழந்தார்.

அய்யங்குட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜன், மஞ்சள் காமாலை காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது  இறுதிச்சடங்கு நேற்று காலை வீட்டில் நடந்த போது திடீரென ராஜனின் தந்தை பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பெரியசாமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.