​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திட்டத்தை தொடங்கி வைத்த சில நிமிடங்களில், கடல் அலையில் சிக்கிய பெண்ணை மீட்ட உயிர்காப்பு பிரிவினர்

Published : Oct 20, 2021 6:34 PM

திட்டத்தை தொடங்கி வைத்த சில நிமிடங்களில், கடல் அலையில் சிக்கிய பெண்ணை மீட்ட உயிர்காப்பு பிரிவினர்

Oct 20, 2021 6:34 PM

சென்னை மெரினாவில், கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட மீட்புக்குழுவினர், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடல் அலையில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு மீட்புக்குழுவினர் அடங்கிய உயிர்காப்பு பிரிவு திட்டத்தினை மெரினாவில் டிஜிபி இன்று தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்த சில நிமிடங்களில் பெண்ணொருவர் கடல் அலையின் வேகத்தில் சிக்கி மூழ்கியதை கண்ட மீட்பு குழுவினர், பாதுகாப்பு கவச உபகரணங்களுடன் கடலுக்குள் இறங்கி அப்பெண்ணை மீட்டனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.