​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி23 புலிக்கு லேசான கல்லீரல் வீக்கம் - வனவிலங்கு மருத்துவர்கள்

Published : Oct 20, 2021 5:46 PM

டி23 புலிக்கு லேசான கல்லீரல் வீக்கம் - வனவிலங்கு மருத்துவர்கள்

Oct 20, 2021 5:46 PM

நீலகிரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அதற்கு லேசான கல்லீரல் வீக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மசினக்குடி, சிங்காரா பகுதியில் சுற்றித்திரிந்த டி23 புலி தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து அந்தப் புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, மைசூருவில் உள்ள வனவிலங்கு மீட்பு மற்றும் புத்துணர்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் டி23 புலிக்கு தசை உயிரணுக்கள் சிதைவு நோய், உடலில் காயங்கள், சோர்வு போன்ற பாதிப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலிக்கு உயிருடன் கோழியும், 8 கிலோ மாட்டிறைச்சியும் உண்ண கொடுக்கப்பட்டதாகவும், எலும்புகளை அதனால் உண்ண முடிவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், புலியின் மன சோர்வை போக்க மையத்தில் பாதுகாக்கப்பட்ட திறந்தவெளியில் விட திட்டமிடப்பட்டுள்ளது.