வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வது நிறுத்தம் - தமிழக அரசு
Published : Oct 20, 2021 4:52 PM
தமிழகத்தில் இனி வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதை நிறுத்தவும் ஏற்கனவே வாங்கிய மணலை 10 மாத காலத்திற்குள் விற்கவும் தமிழக அரசு முடிவெடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கொள்கை ரீதியாக முடிவு எடுத்திருந்தது. இது முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்திலேயே கூடுதல் மணல் குவாரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலை 10 மாதத்தில் விற்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் சுமார் 18 ஆயிரத்து 616 மெட்ரிக் டன் மணல் தேக்கிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.