​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

Published : Oct 20, 2021 3:52 PM

போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

Oct 20, 2021 3:52 PM

போதை மருந்து வழக்கில், ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் வைத்து கடந்த 2 ஆம் தேதி ஆர்யன் கானும் அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்டும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கேட்டு அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவை கடந்த 14 ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதீபதி விவி பாட்டீல் தீர்ப்பை தள்ளி வைத்தார்.

எனினும் இன்று வழங்கிய தீர்ப்பில் ஆர்யன் கானின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.