​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடுக்கி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.!

Published : Oct 20, 2021 2:37 PM

இடுக்கி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.!

Oct 20, 2021 2:37 PM

கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இடுக்கி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் பெரியாறு வழியாக கொச்சியின் அலுவா பகுதியை வந்து சேர்ந்தது.

இதன் காரணமாக பெரியாறு ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கனமழை, வெள்ள பாதிப்பில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திருவணந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டையம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.