அருணாசலப் பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலங்களையொட்டிய எல்லைப் பகுதியில் சீனா படைவலிமையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனப் போர் விமானங்களின் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் தரமுயர்த்தப்பட்ட எல் 70 விமான எதிர்ப்புப் பீரங்கிகளைத் தவாங் என்னுமிடத்தில் இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.
இந்தப் பீரங்கி நிறுவப்பட்ட இடத்திலேயே 360 டிகிரி சுற்றிச் சுழன்று சுடும் திறன் பெற்றதாகும்.