​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு ரத்தாகும் என்ற வாக்குறுதியை, பொது இடங்களில் வழங்க தடை கோரிய வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : Oct 20, 2021 1:51 PM

நீட் தேர்வு ரத்தாகும் என்ற வாக்குறுதியை, பொது இடங்களில் வழங்க தடை கோரிய வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 20, 2021 1:51 PM

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, தேசிய தேர்வுகள் முகமை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தடை செய்யப்படும் என அளிக்கப்பட்ட உறுதியே மாணவர்களின் மன குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம் என கூறி மனு தாக்கலானது.

இதற்கு, அரசியல் கட்சிகள் வாய்மொழியாக வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிய வழக்கில் வாக்குறுதிகளை சட்டத்திற்கு உட்பட்டே நிறைவேற்ற இயலும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.