​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் தகவல்

Published : Jun 16, 2018 12:14 PM



முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் தகவல்

Jun 16, 2018 12:14 PM

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் கூறியுள்ளனர்.

தமிழகம், கேரள அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய 5 பேர் கொண்ட இந்த குழுவினர் பருவகால மாறுபாடுகளின் போது, அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றது.

image

பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் 127 அடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மதகு பகுதிகள், கசிவு நீர் உள்ளிட்டவை குறித்து துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவுநீர் வெளியேற்றம் சரியாக இருப்பதால் அணை பலமாக இருப்பதாக ஐவர் குழுவினர் தெரிவித்தனர்.