சென்னையில் தங்க குண்டுமணி கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை : துணிக்கடை பெண்ணிடம் ரூ. 5 லட்சம் பணம், நகை "அபேஸ்"
Published : Aug 17, 2021 9:35 PM
சென்னையில் தங்க குண்டுமணி கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை : துணிக்கடை பெண்ணிடம் ரூ. 5 லட்சம் பணம், நகை "அபேஸ்"
Aug 17, 2021 9:35 PM
சென்னையில் தங்க குண்டுமணி எனக் கூறி பித்தளை குண்டு மணிகளைக் கொடுத்து 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொளத்தூரில் மோனிகா ஃபேஷன் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வரும் சரிதா என்ற பெண்ணை அணுகிய வடமாநில கும்பல், முதலில் உண்மையான தங்க குண்டுமணியைக் கொடுத்து நம்பவைத்துள்ளது.
பின்னர் தங்களிடம் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க குண்டு மணிகள் இருப்பதாகவும் அவசரத் தேவைக்காக அதனை 10 லட்ச ரூபாய்க்கு விற்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
அதனை நம்பி, வீட்டிலிருந்த 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயைக் கொடுத்த சரிதா, மீதத் தொகைக்கு கையிலிருந்த வளையல், செயின் உள்ளிட்டவற்றையும் கழற்றிக் கொடுத்துள்ளார்.
இந்த முறை அவரிடம் கொடுக்கப்பட்ட குண்டுமணிகளை சோதித்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்து போலீசில் புகாரளித்துள்ளார்.
அண்மையில் இதே பாணியில் அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு பெண் 3 லட்ச ரூபாயை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.